Tamil Movie Ads News and Videos Portal

நேற்று இந்த நேரம்- விமர்சனம்

வாழ்வில் ஒருசில நேரங்கள் மிக முக்கியமானவை. இந்தப் படத்தை நம் நேரம் எப்படியானவை?

ஊட்டிக்கு கொண்டாடப் போகும் மூன்று ஜோடிகள் மற்றும் ஒரு ப்ளேபாய். இவர்களைச் சுற்றித்தான் ஸ்கிரீன்ப்ளே. இந்தக் கேங்கில் திடீரென ஹீரோ காணாமல் போய்விடுகிறார். அவர் ஏன் காணாமல் போனார்? போலீஸ் இன்வெஸ்டிகேசன் ரிப்போர்ட் என்ன? என்பதாக மொத்தப்படமும் விரிகிறது

படத்தில் ஹீரோ உள்பட அனைவருமே இயல்பான நடிப்பை கொடுத்துள்ளனர். கேரக்டர்களுக்கான ரைட்டிங்கில் டெப்த் இருந்திருந்தால், எல்லோரின் ஆக்டிங்கில் இன்னும் டெப்த் இருந்திருக்கும்.

பின்னணி இசை படத்தை முன்னணியில் நிறுத்த முயற்சித்துள்ளது. ஒளிப்பதிவாக்கம் ஓகே ரகமாக அமைந்துள்ளது. ஊட்டியில் இன்னும் ஓவர் டூட்டிப் பார்த்து சில காட்சிகளை அழகாக ஸ்டேஜிங் செய்திருக்கலாம்

இப்போதுள்ள ட்ரெண்ட் படி கதைக்கு மெனக்கெட வேண்டாம் தான். ஆனால் திரைக்கதைக்கு அதிக மெனெக்கெட்டிருக்க வேண்டும். அதை இயக்குநர் தவறவிட்டுள்ளார். திரைக்கதையைச் சரியாக அமைத்திருந்தால் இந்தப் படத்தைப் பார்த்த நேரம் நல்ல நேரமாக அமைந்திருக்கும்..பச்
2.25/5
-மு.ஜெகன் கவிராஜ்