பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் தன்னிடமுள்ள உரிமம் உள்ள படங்களில் ஒரு பகுதியாக 18 படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் ரசிகர்கள் இதனை தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம்.
தனது சமூகவலைதளப் பக்கங்களில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 18 தலைப்புகளை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸில் வெளியான ‘பீஸ்ட்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘டாக்டர்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நிலையில், அடுத்து என்னென்ன படங்கள் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
தங்களுடைய லைன்-அப் படங்கள் குறித்து நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் VP மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “எங்களுடைய பார்வையாளர்கள் உள்ளூர் கதைகளில் இருந்து உலக படங்கள் வரை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் விரும்புவதை தருவதற்கே நாங்கள் விருப்பப்படுகிறோம். ‘பீஸ்ட்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘டாக்டர்’ மற்றும் ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பார்வையாளர்களிடையே பேசுபொருளானது. அதனால், இப்போது எங்களிடம் லைன்-அப்பில் உள்ள படங்களும் அது போன்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பல ஜானர்களில் அமைந்துள்ள இந்தப் படங்களை தென்னிந்தியாவில் உள்ள பல திறமையான கலைஞர்கள் உருவாக்கி உள்ளனர். இந்தியாவைத் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கக்கூடிய அனைத்து பார்வையாளர்களுக்கும் படங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என திரைக்குப் பின்னால் டப்பிங், சப்டைட்டில் ஆகியவற்றிலும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம்” என்றார்.