Tamil Movie Ads News and Videos Portal

நெஞ்சுக்கு நீதி- விமர்சனம்

சமூகநீதியை ஓங்கிச் சொல்லும் படங்கள் இன்றைய சமூகத்திற்கு அவசியத்தேவை. அந்த வகையில் நெஞ்சுக்கு நீதி ஓர் அத்தியவாசிய படமாகிறது

பொள்ளாச்சி அருகே தனக்கான கூலி 30 ரூபாயை கேட்டதற்கு இரு தலித் பெண்கள் கேங் ரேப் செய்யப்பட்டு தூக்கிலிடப்படுகிறார்கள். ஒருபெண் பாதிக்கப்பட்டு மாயமாகி விடுகிறாள். அவள் எங்கிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்கவும் இந்த குற்றத்தை மறைத்து கழுவ நினைக்கும் அதிமார மட்ட ஆட்களை சட்டரீதியாக வேட்டையாடவும் துணிகிறார் ASP உதயநிதி. அவர் கேட்கும் நீதியை சட்டம் எப்படி வழங்கியது? என்பதே இப்படத்தின் கதை

உதயநிதி கரியரில் மிகவும் உருப்படியான படம் இது. அலட்டிக்கொள்ளாமல் அழகாக நடித்துள்ளார். நிறைய இடங்களில் ஸ்கிரீனில் எல்லோரையும் டாமினேடிங் செய்து கவர்கிறார். ஒட்டுமொத்த படத்தையும் உதயநிதியைச் சுற்றியுள்ள ஏனைய கேரக்டர்ஸ் எல்லாரும் நன்றாக நடித்து தாங்கிப்பிடிக்கிறார்கள். சிறியரோல் என்றாலும் சிறப்பாக நடித்துள்ளார் ஆரி அர்ஜுனன்

படத்தில் திபு நைனன் தாமஸின் பின்னணி இசை பெரும் ப்ளஸ். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்தின் ஆகப்பெரும் பலம். படத்தில் இன்னொரு ஹீரோ வசனகர்த்தா தமிழ். ஒவ்வொரு வசனங்களும் ஆணி அடித்தது போல் மண்டைக்குள் கன் கன் என இறங்குகின்றன. நீண்டகாலத்திற்குப் பின் வசனங்களுக்கு தியேட்டரில் கைத்தட்டல் பறக்கினறன.

சட்டமும் கல்வியும் தான் நமது பேராயுதம் என்பதை உதயநிதி கேரக்டர் மிக வலுவாக முன்னிறுத்தியிருப்பது படத்தின் சமூக பாசிட்டிவ். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என கொடுக்கப்பட்ட உரிமைகளை யாரும் சிதைத்திடல் கூடாது என்பதை அங்கங்கே உணர்த்தும் இடங்களும் சிறப்பு. இந்தி ரிமேக் படம் என்றாலும் ஒரிஜினல் படம் தந்த தாக்கத்தில் 1% கூட இப்படம் பின் வாங்கவில்லை..

நெஞ்சுக்கு நீதி நெஞ்சை நிறைத்தது..

-மு.ஜெகன் கவிராஜ்