Tamil Movie Ads News and Videos Portal

போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்‌கிறார் நாக சைதன்யா!

இயக்குநர் வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘NC22’-ல் அக்கினேனி நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி இந்தக் கதையில் கதாநாயகியாக நடிக்கிறார். பைலிங்குவல் கதையாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரவிந்த் சுவாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாக சைதன்யாவின் பிறந்தநாள் நவம்பர் 23ம் தேதி வருவதை ஒட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘கேப்டன் கூல்’ இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இருவரும் படத்தின் ப்ரீ-லுக் வெளியீட்டு தேதியை காணொளியில் அறிவித்துள்ளனர். பார்வையாளர்களை கவரும் விதமான இந்த ப்ரீ-லுக் இன்று வெளியாகியுள்ளது.

இந்த ப்ரீ லுக்கில் நாக சைதன்யா தீவிரமான காவல் துறை அதிகாரியாக வருகிறார். அவரது வேகத்தையும் தீவிரத்தையும் மட்டுப்படுத்தும் விதமாக சக போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் ஃபோர்ஸூடன் இந்த ப்ரீ லுக்கில் உள்ளனர். மேலும், நவம்பர் 23 அன்று காலை 10.18-க்கு வெளியாக இருக்கும் முதல் பார்வைக்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே ஏற்படுத்தும் விதமாக இந்த ப்ரீ-லுக் அமைந்துள்ளது.