வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாகசைதன்யா இதுவரை கதாநாயகானாக நடித்துள்ள படங்களில் NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இணைந்துள்ள தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குறித்தான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுடைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த திறமையான நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர் இந்த ஆக்ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர்.
#NC22