Tamil Movie Ads News and Videos Portal

தொடர்ச்சியாக கோவில்களில் வழிபாடு செய்யும் நயன்தாரா

தமிழ்த் திரையுலகின் நட்சத்திர நடிகையான நயன்தாரா தன் திரைப்பயணத்தில் மட்டுமின்றி தன் வாழ்க்கை பயணத்தில் பலவிதமான ஏற்ற இறக்கங்களைக் கடந்தவர். நடிகர் சிம்பு, பிரபுதேவா போன்றோருடன் காதல் வாழ்க்கையில் இருந்து, பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்களைப் பிரிந்தவர். பிரபுதேவாவுடன் காதலில் இருக்கும் போது, அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் ஒரு தகவல் பரவியது நினைவிருக்கலாம். தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வாழ்க்கையில் இருக்கும் நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்யப் போகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பிள் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி சென்ற நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி, தொடர்ச்சியாக இப்பகுதியில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கன்னியாகுமரி பவானி அம்மன், திருச்செந்தூர் முருகன் ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்த இவர்கள், தற்போது சுசீந்திரம் கோவிலில் ஜோடியாக சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.