தென்னிந்திய திரையுலகில் 15 ஆண்டுகளாக கோலோச்சும் நடிகை என்றால் அது நயன்தாராதான். இன்றும் உச்சநட்சத்திரமாக விளங்கும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்கள் மற்றும் சர்ச்சைகளை உள்ளடக்கியது. முதலில் நடிகர் சிம்புவை காதலித்தார். அந்த காதல் தோல்வி அடைந்த பின்னர், நடிகரும் இயக்குநரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார். அவரை இரண்டாவது திருமணம் செய்வதற்காக மதம் கூட மாறினார்.
பின்னர் அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கும் நயன் விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இதுவரை தனது பழைய காதல் பற்றி கருத்து ஏதும் கூறாமல் இருந்த நயன்தாரா தற்போது முதன்முறையாக இது குறித்து வாய் திறந்திருக்கிறார். தன்னுடைய முந்தைய காதல்கள் குறித்து கூறும் போது, “நம்பிக்கை இல்லாத காதல்கள் நிலைக்காது. நம்பிக்கை இல்லாத இடத்தில் வாழ்வதைவிட தனியாக வாழ்வதே மேல் என்று எண்ணி பழைய காதல்களை கடந்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.