Tamil Movie Ads News and Videos Portal

“நவரசா” படத்தின், ரிலீஸ் தேதி? அறிவித்தது Netflix !

இந்தியாவின் மிகப்பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான “நவரசா” Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் பல முன்னணி ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம், தமிழ் திரையுலகின் பொன்தருணமாக நிகழவிருக்கிறது

மும்பை 2021 ஜுலை 9 : தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது Netflix நிறுவனம். தமிழின் புகழ்மிகு ஆளுமை இயக்குநர் மணிரத்னம் அவர்கள், இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.
மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், புகழ்மிகு படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.

மனித உணர்வுகள் – கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு ஒன்பது கதைகள் ஆந்தாலஜி திரைப்படமாக Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.