Tamil Movie Ads News and Videos Portal

நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த
கட்டில் திரைப்படக்குழுவின் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியின் விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000
ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள்.

மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம்.

நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை
எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும்
விதமாக
கட்டில் திரைப்படக்குழு,
“கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி”யை அறிவித்திருக்கிறது.
12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

தேர்வுக்குழு முடிவே இறுதியானது.

உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும்,
பங்கேற்கும் இப்போட்டியில் ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்.

பிரபல கவிஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான கவிதைகளுக்கு, விரைவில் நடைபெற இருக்கும் கட்டில் திரைப்பட (Audio Release) பாடல் வெளியீட்டு விழாவில் பரிசு தொகை காசோலையாக வழங்கப்படும் என்று கட்டில் திரைப்படத்தின் கதாநாயகி சிருஷ்டி டாங்கே தெரிவித்திருக்கிறார்.
இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு பி.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி எடிட்டிங் செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களை வைரமுத்து- மதன் கார்க்கி ஆகியோர் எழுதுகிறார்கள்.
ஒளிப்பதிவை வைட்ஆங்கிள் ரவிசங்கர் கையாளுகிறார்.