மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜுமேனன் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இப்படத்தில் இடம் பெற்ற ”கலக்காத சந்தனமே” பாடலைப் பாடியவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கேரள மலைப்பகுதிகளில் வாழும் நச்சம்மா என்ற வயதான பெண்மணி ஆவார்.
இப்பாடல் யூடியுப்பில் இதுவரை 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. தற்போது நச்சம்மா ஒரு யூ-டியூப் சேனல் ஒன்றைத் துவங்கி அதில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை, நாகரீகம் மற்றும் பிற பாடல்களை பதிவேற்றம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இது கண்டிப்பாக வரவேற்க்கப்பட வேண்டிய யூ-டியூப் சேனல் தான்.