Tamil Movie Ads News and Videos Portal

நாய்சேகர்- விமர்சனம்

 

பேண்டசி படங்களில் லாஜிக் பார்க்கவே கூடாது என்ற முன்னறிவிப்போடு படம் துவங்கியதும் வெண்பொங்கல்னு சொல்லி வீண்பொங்கல் ஆக்கப்போறாய்ங்க என்ற பயம் இருந்தது. பட் அதற்கு இடம் கொடுக்காமல் பலப்பல மேஜிக்குகள் நடத்தி 2 மணி நேரத்தை அழகாக கடத்திவிட்டார்கள்

காமெடியன் சதிஷை படம் நெடுக செரித்துக்கொள்ளவே பெரிய போராட்டம் தேவை என்ற போது..இப்படத்தில் ஹீரோ சதிஷை..? நோ டவுட்.. We can accept him. நாய்போன்ற பாவனைகளில் நாயோடு கடும்போட்டி போட்டு லைக்ஸ் வாங்குகிறார். Wife- wifi என்ற மொக்கை ஒன்லைன்கள் இருந்தாலும், “நீங்க என்னாளுங்க தம்பி” என்ற கேள்விக்கு, “உங்க பொண்ணோடு ஆளுங்க” என்ற பதிலடி பன்லைன்கள் சிரிக்கவும் வைக்குது.

ஒளிப்பதிவு இசை போன்ற சமாச்சாரங்கள் கதையை ஓட வைக்கும் ரைடர்ஸ். படம் ஆரம்பிச்ச சிலதுளி நேரம் பிசிறு தட்டினாலும் போகப்போக போகி முடிந்த பொங்கலாய் திரையெங்கும் கலகல. ஒரு பெஸ்டிவல் நாளில் குடும்பத்தோடு உட்கார்ந்து ஓரளவு கவலை மறந்து ரசிக்க தாராளமாக நாய்சேகரை அணுகலாம்

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படியான சிறிய படங்களை தயாரிப்பது ஓர் பாசிட்டிவ் way. ஹேப்பி பொங்கல்?

-மு.ஜெகன் கவிராஜ்