Tamil Movie Ads News and Videos Portal

மிஷ்கின் சம்பளத்தில் கை வைக்க கோர்ட் உத்தரவு

வித்தியாசமான படங்களுக்குப் பேர் போனவரான இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ரீலிஸுக்கு தயாராகி இருக்கும் திரைப்படம் “சைக்கோ”. உதயநிதி ஸ்டாலின் கண்பார்வை இல்லாதவராக நடித்திருக்கிறார். நாயகியாக அதிதிராவ் நடிக்க, போலிஸ் அதிகாரியாக இயக்குநர் ராம் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நித்யாமேனன் நடித்திருக்கிறார். வெகுவிரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு எதிராக ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், “என் மகன் மைத்ரியாவை நாயகனாக வைத்து படம் இயக்க இயக்குநர்

மிஷ்கினுக்கு 1 கோடி ரூபாய் பணம் கொடுத்திருந்தேன். ஆனால் என் மகனுக்கு என்று உருவாக்கிய கதையை உதயநிதி ஸ்டாலினுக்கு மிஷ்கின் கொடுத்துவிட்டார். 1 கோடி ரூபாயில் 50 இலட்சத்தைத் தான் திருப்பிக் கொடுத்திருக்கிறார். மீதி பணத்தை கொடுக்கும்வரை இப்படம் வெளியாக தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “சைக்கோ” படத்தை தயாரித்த ‘டபுள்மீனிங் புரொடெக்ஷன்ஸ்’ பட நிறுவனம் மிஷ்கினுக்கு கொடுக்க வேண்டிய சம்பளப் பணத்தில் 50 இலட்சம் ரூபாயை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.