சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருக்கும் படம் “தர்பார்”. இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன் கூட்டியே வெளியாகவிருக்கிறது. இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் முருகதாஸ், “எம்.ஜி.ஆர்
அரசியலில் தீவிரமாக இருக்கும் போது வெளியான படம் “உலகம் சுற்றும் வாலிபன்”. ஆனால் அப்படத்தில் அரசியல் இருக்காது. அது போல் தான் தர்பார் படமும். இப்படத்தில் அரசியல் இருக்காது. ரஜினிகாந்த் மும்பை போலீஷ் கமிஷ்னராக நடித்திருக்கிறார். அவர் இனிமையான மனிதர். அவரின் உழைப்பும் சுறுசுறுப்பும் ஆச்சரியப்படுத்தும். சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கான கதை என்னிடம் தயாராக இருந்தது. அதை சூப்பர் ஸ்டாரிடம் கூறினேன். அவருக்கும் பிடித்திருந்தது. இருப்பினும் வேறு சில காரணங்களால் அப்படத்தை தொடர முடியவில்லை.” என்று கூறினார்.