தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க படத்தொகுப்பாளர்கள் வரிசையில் ஸ்ரீகர் பிரசாத்திற்கு ஒரு அசைக்க முடியாத இடம் எப்பொழுதுமே உண்டு. இன்று பெரிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களுக்கு முதல் சாய்ஸாக இருப்பவர் ஸ்ரீகர் பிரசாத் தான். இவர் சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தி லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
இதுவரை இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கன்னடம், ஒரிஸா, பெங்காலி, குஜராத்தி, அஸ்ஸாமி, மராத்தி, சிங்களம், நேபாளி, பஞ்சாபி என 17 மொழிகளில் உருவான படங்களுக்கு படத்தொகுப்பு செய்து சாதனை படைத்திருக்கிறார். இந்த சாதனைக்காக லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஸ்ரீகர் பிரசாத், அது குறித்துப் பேசும் போது, “இந்தியனாக இருப்பதில் இதுவொரு பெரிய அனுகூலம். பல மொழிகள் ஒரே உணர்வு” என்று கூறியுள்ளார்.