Tamil Movie Ads News and Videos Portal

நவாஷ் சித்திக் குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல்

பாலிவுட் திரையுலகில் சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்து தன் தனித்துவமான நடிப்பால் பல உயரங்களை தொட்ட நடிகர் நவாஷுதின் சித்திக். இவர் சமீபத்தில் வெளியான ரஜினியின் பேட்ட படத்தில் சிங்காரம் என்கின்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அடிப்படையிலேயே மேடை நடிகரான இவர், கமல் கூறிய திறமையான வளரும் நடிகர்கள் பட்டியலிலும் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருக்கும் நவாஷுதின் உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை 9 பேர். அவர்களில் ஒருவரான 27 வயது தங்கை 8 ஆண்டுகளுக்கு முன்பே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் முற்றியதால் அவர் நேற்று மரணமடைந்தார். இதனால் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் நவாஷுதீன் குடும்பத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.