ரசிகர்களின் வரவேற்பால் “கன்னிமாடம்” தொடர்ந்து 3வது வாரம் அதிகரிக்கும் தியேட்டர்கள்… உற்சாகத்தில் படக்குழு!
ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆன படம் கன்னிமாடம். இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் – சாயா தேவி நடித்திருக்கிறார்கள். இவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் ஆணவ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்திருந்தது.
படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த தொல்.திருமாவளவன், கீ.வீரமணி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்தது. கன்னிமாடம் ரிலீஸ் ஆகாத பல ஊர்களில் 6ம் தேதி சுமார் 30 தியேட்டர்களில் வெளியாகிறது கன்னிமாடம்.
தமிழ் சினிமா வரலாற்றில் பிரலங்கங்ள் இல்லாமல் அறிமுக நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகி 2 வாரம் கடந்த நிலையில் 3வது வாரத்தில் மீண்டும் 30 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் ஒரே படம் கன்னிமாடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் படத்தின் மீதான கருத்தும், சாதி வெறிக்கும், ஆணவ கொலைக்கும் எதிராக பேசுவதும்தான்.
தியேட்டர்கள் அதிகரித்ததை தொடர்ந்து படக்குழு உற்சாகத்தில் உள்ளது.