1990, 2000 காலகட்டங்களில் முன்னணி தமிழ் ஹீரோயினாக இருந்தவர் நடிகை மீனா. பின்னர் திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கினார். மீனாவின் மகளான நைனிகா படங்களிலும் நடித்தார். தற்போது நைனிகா வளந்துவிட்ட நிலையில் மீண்டும் படங்களில் மீனா நடிக்கத் துவங்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “அண்ணாத்தே” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் வெஃப் சீரிஸ் சிலவற்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் மீண்டும் நடிப்பது குறித்து பேசும் போது, “நான் ஒரு குழந்தைக்கு அம்மா தான். ஆனாலும் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஹீரோவின் அம்மாவாக மட்டும் நடிக்க மாட்டேன். அந்தக் கதாபாத்திரத்தை நான் வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. அக்கதாபாத்திரத்தில் நடிப்பதால் எந்தவித சவாலும் இருக்காது என்பதோடு, அது என்னை மிகவும் வயதான தோற்றத்தில் காட்டும் என்பதால் தான் அதை தவிர்க்கிறேன். தற்போது வெஃப் சீரிஸில் நடித்து வருகிறேன். அது கூட மிகவும் நன்றாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.