மூன்று மாதங்கள் சைகை மொழி கற்றுக் கொண்ட அனுஷ்கா
2017ம் ஆண்டு வெளியான பாகமதி திரைப்படத்திற்குப் பிறகு அனுஷ்கா இரண்டு ஆண்டுகாலமாக எந்தவொரு மொழிப்படத்திலும் நடிக்கவில்லை. உடல் எடையைக் குறைக்க அவர் தீவிர சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார் என்று கூறப்பட்டது. தற்போது மீண்டும் உடல் எடையைக் குறைத்து பழைய அழகு அனுஷ்காவாக மாறியிருப்பவர் மீண்டும் படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். மாதவனுக்கு ஜோடியாக ‘சைலன்ஸ்’ திரைப்படத்தில் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத் திறனாளியாக அனுஷ்கா நடித்திருக்கிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்காக அனுஷ்கா பிரத்யேகமான முறையில் சைகை மொழியை மூன்று மாத காலங்கள் கற்றுக் கொண்டப் பின்னர் தான் இப்படத்தில் நடித்தார் என்கின்ற தகவலை படத்தின் இயக்குநரான ஹேமந்த் மதுர்க்கர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இப்படம் தமிழில் நிசப்தம் என்ற பெயரில் வெளியாகவிருப்பதோடு, மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளிலும் உலகளவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.