மூன்றாவது வாரமும் ஆக்கிரமிப்பு நடத்தும் பிகில் கைதி
பிகில் கைதி படங்கள் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்து இதோ இன்று மூன்றாவது வாரம் தொடருது. இந்நிலையில் நிறைய திரையரங்குகளில் இவ்விரண்டு படங்களும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது சமப்ந்தமாக நேற்று கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ட்விட்டரில் ஒரு சந்தோஷ ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். பிகில் ஆதரவாளர்கள் அதேபோல் ட்விட்டரில் பிகிலின் ஆதிக்கம் தொடருவதைப் பற்றி ரைட்டப் போட்டிருக்கிறார்கள். இந்தத் தீபாவளி இரண்டு படத் தயாரிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த தீபாவளியாக முடிந்திருக்கிறது. மேலும் இன்று வெளியாகும் மிகமிக அவசரம், தவம், பட்லர் பாலு ஆகிய படங்கள் பெரிய எண்ணிக்கையில் தியேட்டர்களை கைப்பற்றவில்லை. அதனால் இந்த வாரமும் பிகில் கைதி இருபடங்களும் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.