மலையாளத் திரையுலகின் ஜாம்பவான் நடிகரும் உலகளவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைக்கு பெயர் போன நாயகர்களில் ஒருவருமான ஜாக்கிசான் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உலா வந்தது.
ஆனால் அந்த நேரத்தில் மோகன்லால் படங்களுக்கு மிகப்பெரிய ஓவர்சீஸ் மதிப்பு இல்லாததால், இப்படத்தின் வேலைகள் சூடு பிடிக்கவில்லை. ஆனால் தற்போது ‘புலிமுருகன்’, ‘லூஸிபர்’ போன்ற படங்களின் மூலம் மோகன்லாலுக்கு ஓவர்சீஸ் வேல்யு உயர்ந்திருப்பதால் மீண்டும் இப்படத்தின் பணிகளை தூசித் தட்டத் தொடங்கியுள்ளனர். ‘நாயர்-சான்’ என்று பெயரிடப்படலாம் என்று கருதப்படும் இப்படத்தில் மோகன்லால் படைவீரராகவும் ஜாக்கிசான் மார்ஸியல் கலைகளைக் கற்றுக் கொடுக்கும் கலைஞராகவும் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.