Tamil Movie Ads News and Videos Portal

”மோகன் தாஸும் வன்முறையும்”

விஷ்ணு விஷால் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் திரைப்படம் “எஃப்.ஐ.ஆர்” இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் வரை முடிவடைந்திருக்கும் நிலையில் கொரோனா தாக்கத்தினால் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. காடன், ஜகஜால கில்லாடி, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், தனது புதிய படம் தொடர்பான அறிவிப்பையும் அதன் மோஷன் டீஸரையும் வெளியிட்டிருக்கிறார் விஷ்ணு விஷால். ’களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார்.

“மோகன் தாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இப்படத்தின் மோஷன் டீஸரில் விஷ்ணு விஷால் ஒருவரை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு, தன் உடையை வாஷிங்மிஷினில் போடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. படத்தின் தலைப்பாக காந்தியடிகளின் இயற்பெயரான மோகன் தாஸ் என்பதை வைத்துவிட்டு, படத்தில் இவ்வளவு வன்முறையா..? என்று பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.