Tamil Movie Ads News and Videos Portal

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி- விமர்சனம்

கல்யாணம் பண்ணக்கூடாது ஆனா குழந்தை வேணும்.. குழந்தை வேணும் ஆனா பிசிக்கல் இண்டிமேஸி எதுவும் வேணாம் இப்படிச் சொல்ற பேமஸ் செப் ஆன அனுஷ்கா. அவங்க ஸ்பம் டோனரா ஒரு பையனை தேர்ந்தெடுக்கிறாங்க. அந்தப் பையன் ஹீரோ நவீன் பொலிஷெட்டி. அவர் அனுஷ்காவோட நோக்கம் புரியாமல் அவரை சீரியஸா லவ் பண்ண, அனுஷ்கா பிகு பண்ண முடிவில் ஹேப்பி எண்டிங்😍

படத்தின் ஆகப்பெரும் ப்ளஸ்கள் அனுஷ்கா மற்றும் நவீன் பொலிஷெட்டி இருவரின் நடிப்பும் தான். எந்தவித எமோஷன்ஸும் தேவையில்லை என்ற முடிவோடு வாழும் அனுஷ்கா காட்டும் பெர்பாமன்ஸ் எல்லாம் ஜென் துறவி போன்றவை. க்ளைமாக்ஸ் டைமில் அவர் காட்டியுள்ள நடிப்பில் தெரிவது தேர்ந்த நடிகையின் முதிர்ச்சி. நவீன் பொலிஷெட்டி அடிக்கும் டைமிங் ரைமிங் காமெடிகள் அல்டி ரகம்! படத்தில் அவர் அனுஷ்கா மீது காதலாகி கசிந்துருகும் தருணங்கள் வெயில்கால பனி, பனிக்கால வெயில் போல சூழலுக்கேற்ற இதம்

கதையைத் துருத்தி விலகி நிற்காத இசையை தந்துள்ளார் இசை அமைப்பாளர் ரதன். நிரவ் ஷாவின் கேமரா பனி, வெயில், நிழல் உள்ளிட்ட யாவற்றையும் மிக அழகாக காட்டியுள்ளது.

சின்ன லைன்..இப்படித்தான் முடியும் என முன் கூட்டியே யூகிக்கக் கூடிய க்ளைமாக்ஸ். இருந்தும் கூட கொஞ்சமும் என்கேஜிங் குறையாமல் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் மகேஷ்பாபு P. என்னதான் டெக்னாலஜி மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றாலும், மனிதருக்குள் இருக்கும் ஆதி உணர்ச்சியை அசைக்கவே முடியாது என்று சொல்லாமல் சொன்ன விதம் போற்றுதலுக்குரியது. யானை வாழும் காட்டில் எறும்பும் வாழ்கிறது என்பது போல பெரும் படங்களின் நடுவே இந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் ஷெட்டியும் வாழட்டும். டிக்கெட் புக் பண்ணுங்க கய்ஸ்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்