Tamil Movie Ads News and Videos Portal

சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது-பரத்!

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில் நடிகர் பரத் பேசியதாவது..,

“சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை. தயாரிப்பாளர் டில்லிப்பாபு அனைவரையும் மதிக்க கூடிய ஒரு நபர். இந்த கதை பற்றியும், இயக்குனர் பற்றியும் நான் கூறிய போது, கதையின் தன்மையை புரிந்து கொண்டு, இதை எடுக்க உடனே ஒத்துகொண்டார். இந்த படத்தை உருவாக்கியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் ஒருசேர ஒத்து போக கூடிய நபர் இயக்குனர். இந்த படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கே எஸ் ரவிக்குமார் சாருடனும், வாணி போஜனடனும் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.

இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மற்ற நடிகர்கள் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்

#Miral #மிரள்