Tamil Movie Ads News and Videos Portal

‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு!

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மைக்கேல்’. இதில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி இருக்கிறது. ‘நீ போதும் எனக்கு..’ எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுத பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார்.

இந்த பாடலின் காணொளியில் நாயகன் சந்தீப் கிஷனும், நாயகி திவ்யான்ஷா கௌஷிக்கும் சந்தித்துக் கொள்கிறார்கள். திவ்யான்ஷா கௌஷிக் தனது வீட்டின் நுழைவாயிலை திறந்து சந்தீப் கிஷனுக்கு காதலிப்பதற்கான அறிகுறிகளை வழங்குகிறார். இதனை தொடர்ந்து பாடல் தொடங்குகிறது. காதலியிடம் அத்துமீறலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும் சந்தீப்பிடம்.. வாய்மொழியாக அழைப்பு விடுக்க, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இவர்கள் இருவரின் காதல் ரசாயன கலவை.. ரசிகர்களை கண்ணிமைக்க மறந்து, ரசிக்க வைக்கிறது. இந்த பாடலில் இடம்பெறும் உதடுடன் உதடு பொருத்தி கொடுக்கும் முத்தக்காட்சியில்.. இசையும், பாடகரின் குரலும், கலைஞர்களின் காதலுடன் கூடிய நடிப்பும்… ஒரே புள்ளியில் சந்தித்து மாயாஜால நடனமாட.. பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது.

இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.