மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் கெளதம் மேனன், தவிர்த்து பிரியதர்ஷிணி, ஏ.எல்.விஜய் போன்றோரும் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கெளதம் மேனன் இயக்கிய வெஃப் சீரிஸ் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில்
கங்கணா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். அவர் இந்த வேடத்திற்குப் பொறுத்தமற்றவர் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது. அதில் எம்.ஜி.ஆர் ஆக நடித்திருக்கும் அரவிந்தசாமியின் வேடம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.