Tamil Movie Ads News and Videos Portal

கொரோனா ஊரடங்கில் தேவதை அனுப்பிய செய்தி

- Advertisement -

இயக்குநர் ஹலிதா சலீம் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான நேரங்கள் மன அழுத்தத்துடன் கழிகிறது. இருப்பினும் இது போன்ற ஒரு நேரத்தில் எனக்கு தேவதையிடம் இருந்து வந்தவொரு செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தேவதைக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன் நடிகை சாய் பல்லவி “சில்லுக் கருப்பட்டி” படம் பார்த்துவிட்டு எழுதிய பாராட்டுச் செய்தியையும் இணைத்துள்ளார்.

அந்த பாராட்டு செய்தியில் சாய்பல்லவி, “நான் என் குடும்பத்தாருடன் இப்பொழுது தான் சில்லுக் கருப்பட்டி படத்தைப் பார்த்தேன். நாங்கள் அனைவருமே மிகுதியான மகிழ்ச்சியுடன் சந்தோஷத்தில் இருக்கிறோம். ஹலிதா நான் உங்களுக்காக சந்தோஷம் அடைகிறேன். நீங்கள் இதுபோல் இன்னும் பல ரத்தினங்களை உருவாக்க வேண்டும். எங்களை சந்தோஷப்படுத்தியதற்கு நன்றி. உங்களுக்கு நிறைய அன்பும் பிரார்தனைகளும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.