எல்லா மனிதர்களுக்கும் இரு பக்கம் இருக்கும். வெளிப்பக்கம் உள்பக்கம் என அந்த இரண்டு பக்கங்களில் மறைக்கப்பட்ட பக்கம் வெளிப்பட்டால் என்ன நடக்கும் என்பதை அலசுகிறது மெரி கிறிஸ்துமஸ்.
இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் நன்னாளில் விஜய்சேதுபதியும் கத்ரினா கைஃபும் சந்திக்கிறார்கள். இருவருக்கும் ஒரு நெருக்கம் உண்டாகிறது..அந்த நெருக்கத்திற்குப் பின்னால் ஒரு க்ரைம் இருக்கிறது. அந்தக் க்ரைமிற்கு காரணிகள் யார் யார்? தீர்வுகள் என்ன என்பதே படத்தின் திரைக்கதை
திரையில் மாஸ்டர் ஸ்ட்ரோக் அடிக்கிறார் நம்ம வி.ஜே. கத்ரினா மீதே மொத்தக்கதையும் பயணித்தாலும் தன் இருப்பை அசால்டாக உறுதி செய்துள்ளார் விஜய்சேதுபதி. மிகவும் தேர்ச்சி பெற்ற நடிப்பை கொண்டுவந்து நல்ல முதிர்ச்சி காட்டியுள்ளார் கத்ரினா கைஃப். கவின்பாபு, சண்முகராஜா உள்ளிட்ட ஏனைய நடிகர்களும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். அதி முக்கியமாய் க்ளைமாக்ஸ் பக்கத்தில் நம்மூர் ராதிகாவின் நடிப்பு அல்டிமேட் ரகம்.
ஸ்ரீராம் ராகவனின் எழுத்து தான் படத்தின் முதல் ஹீரோ.. படத்தின் திரைக்கதை சும்மா அள்ளுது. எந்தவொரு காட்சியும் நம் கணிப்பின் படி முடிவதே இல்லை. ஒவ்வொரு இடத்திலும் சின்னச் சின்ன ஆச்சர்யங்கள் வைத்துள்ளார் இயக்குநர். பின்னணி இசையும் படத்தை முன்னணியில் கொண்டு நிறுத்துகிறது. தற்போதைய மும்பை பாம்பேவாக இருந்த காலகட்டத்தில் நடக்கும் கதை . அதனால் ஒளிப்பதிவாளரும் ஆர்ட் டைரக்டரும் இணைந்து விஷுவலில் அட்டகாசம் செய்துள்ளனர். மேக்கிங் ஆக எல்லா அம்சங்களோடும் கூடிவந்துள்ள படம் எமோஷ்னலாக கனெக்ட் ஆக மறுக்கிறது. அதற்கான காரணம் எந்தக் கேரக்டரும் உயிர்ப்போடு எழுதப்படவில்லை. கேரக்டர்களுக்கான ரைட்டிங்கில் மட்டும் இன்னும் மாஸ் காட்டியிருந்தால் மெரி கிறிஸ்துமஸ் இன்னும் இனித்திருக்கும். நல்லதொரு திரை அனுபவத்திற்காகவும், திரைக்கதை செய்யும் மேஜிக்கிற்கு ஆகவும் நிச்சயமாக பார்க்கலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்