பேமிலி எமோஷ்னலையும் நாட்டுப்பிரச்சனையும் கலந்து கட்டி கொடுத்தால் அதற்குப் பெயர் தான் மீண்டும். டைட்டில் மூலமாக தான் மீண்டும் வந்துவிட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் சரவண சுப்பையா
ரா ஏஜெண்டான கதிரவனுக்கு நாட்டுக்கு அச்சுறுத்தலை தரவிருக்கும் ஒரு பெரிய கேங்கை வதம் செய்ய வேண்டிய பொறுப்பு வருகிறது. தன் உயிரை துச்சமென மதித்து அந்த ஆபரேசனுக்காக அவர் செல்கிறார். இடையில் அவரது மனைவி சரவண சுப்பையாவிற்கு துணைவியாக இருக்கிறார். ஆனால் குழந்தை கதிரவனோடு இருக்கிறது. மனைவியோ குழந்தை அன்பிற்கு ஏங்குகிறார். கதிரவன் நாட்டுப்பிரச்சனையை எப்படித் தீர்த்தார்? குடும்பச் சிக்கலில் இருந்து எப்படி மீண்டார்? என்பதே மீண்டும் படத்தின் கதை
கதிரவன் வசனங்கள் இல்லாத காட்சிகளில் சோபிக்க தவறுகிறார். நாயகி நடிப்பு படத்தின் பலம். சரவண சுப்பையா திறம்பட நடித்து தன் கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறார். அதுபோல் இன்னும் நிறைய இயக்குநர்களை படத்தில் நடிக்க வைத்துள்ளார். எல்லோருமே ஓ.கே ரகம். கேபிள் சங்கர் ஓரிரு காட்சிகளில் அதிக கவனம் ஈர்க்கிறார்.
படத்தின் ஒட்டுமொத்த ப்ளஸ்களில் பெரிய ப்ளஸ் கேமரா வொர்க் . கேமரா மேன் மாண்டேஜ் பாடல் துவங்கி பல இடங்களில் தன் முத்திரையைப் பதித்துள்ளார். இசை அமைப்பாளரின் உழைப்பும் பாராட்டத்தக்கதே.
ஒரு திரைப்படத்தின் ஜீவனே திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் தான். அந்த இரண்டும் தான் மீண்டும் படத்தில் சரியாக அமையவில்லை. கதையாக சொல்லும் போது பிரமாதமாக தெரியும் சினிமா காட்சிகளாக விரியும் போது பிரமிப்பை ஏற்படுத்தவில்லை.. ஆனாலும் நல்ல முயற்சிக்காக ஒருமுறை பார்க்கலாம். முக்கியமான ஒன்று. படத்தில் வசனங்கள் எல்லாமே அல்டிமேட்
-மு.ஜெகன் கவிராஜ்