Tamil Movie Ads News and Videos Portal

மீண்டும் வெள்ளித்திரைக்கு விஜயம் செய்யும் “ப்ரியமுடன் கெளசல்யா”

- Advertisement -

2000 காலகட்டத்தில் விஜய் நடித்த ப்ரியமுடன், நேருக்கு நேர் ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கெளசல்யா. திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த வாரம் வெளியாக இருக்கும் “கைலா” திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு அவர் விஜயம் செய்கிறார். பூதோபோஸ் இன்டர்நேஷனல் சார்பாக பாஸ்கர் சீனிவாசன் தயாரித்து இயக்கியிருக்கும் இப்படம் திரில்லர் வகைத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. தனா நாயுடு என்னும் புதுமுக நடிகை கதை நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அன்பாலயா பிரபாகரன், மதுரை வினோத், வீரா, கோகன், குழந்தை நட்சத்திரம் கைலா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.