மீண்டும் அறிவழகன் அருண் விஜய் கூட்டணி
கடந்த சில ஆண்டுகளாக அருண் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தடையறத் தாக்க திரைப்படத்தில் இருந்தே அவரது சினிமா கிராஃப் சீராக ஏறிக் கொண்டு செல்கிறது. சென்ற ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளியான குற்றம் 23 திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தற்போது மீண்டும் அதே அறிவழகனோடு அருண் விஜய் கைகோர்க்க இருக்கிறார். இது குறித்து பேசிய இயக்குநர் அறிவழகன் இப்படம் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே நரேன் கார்த்திக் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்திருக்கும் ‘மாபியா” திரைப்படம் ரீலிஷ்க்கு தயாராக இருக்கிறது. மேலும் தற்போது மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.