மீண்டும் ரஜினியுடன் இணையும் மீனா குஷ்பு
ஒரு காலத்தில் ரஜினியுடன் இணைந்து கதாநாயகிகளாக நடித்தவர்கள் மீனாவும் குஷ்பு-வும். மீனா ரஜினியுடன் இணைந்து எஜமான், முத்து போன்ற படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். முத்து ரஜினியோடு மீனா நடித்த கடைசிப் படமாகும். இப்படம் வெளியாகி 24 வருடங்கள் ஆகின்றது. அது போல் குஷ்பு ரஜினியோடு சேர்ந்து பாண்டியன், தர்மதுரை, ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். பாண்டியன் குஷ்பு ரஜினியோடு இணைந்து நடித்த கடைசிப்படமாகும். இப்படம் வெளியாகி 27 வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவரும் இப்பொழுது ரஜினி நடிக்கும் 168வது படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். தர்பார் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் மீனா மற்றும் குஷ்பு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் டிசம்பர் 11 முதல் ஹைதராபாத் நகரில் தொடங்கி நடைபெறவிருக்கிறது.