Tamil Movie Ads News and Videos Portal

மாயத்திரை டீசரை வெளியிட்ட இயக்குனர் ப்ரியதர்சன் !

- Advertisement -

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த S .N அருணகிரி இசைமைக்கிறார் .ப.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் .

இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . பிரபல இயக்குனர் & தயாரிப்பாளரான ப்ரியதர்சன் டீசரை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார் .மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமா பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.