Tamil Movie Ads News and Videos Portal

நான்கு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட ஃபேன்டஸி த்ரில்லர், மாயன்!

தமிழ் சினிமாவில் 56 வருடங்களுக்குப் பின் சிவனை கதைநாயகனாக கொண்ட படமாக மாயன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது மாயன் திரைப்படம்.மாயன் என்றால் கால பைரவனின் பிள்ளைகள் என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும் அழிப்பவர்களும் மாயர்களே.

அப்பேர்ப்பட்ட மாயர்களுக்கும் நம் மூதாதையர்களும் ஒரு பெரிய உறவு இருக்கிறது. அந்த வரலாற்று உறவின் அடிப்படை தான் மாயன் படத்தின் கதைக்கரு.முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதைநாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் நடித்துள்ளனர்.

ஜான்விஜய், தீனா,கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், கே கே மேனன், உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஆங்கில பதிப்புக்காக அனைவருமே ஆங்கிலம் பேசி நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார், ராஜேஷ் கண்ணா. இந்த பிரமாண்ட பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது.இணை தயாரிப்பு ஜி.வி.கே.எம் எலிஃபண்ட் பிக்சர்ஸ்.