Tamil Movie Ads News and Videos Portal

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசர் வெளியீடு!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மத்தகம்’ சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும் யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும். பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.

டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும், குட் நைட் புகழ் மணிகண்டன் முதல் முறையாக ஒரு வில்லத்தனம் மிகுந்த கேங்ஸ்டராகவும் தோன்றுகிறார்கள்.வெகு சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருக்கும் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டுவதுடன், இந்த சீரிஸ் ஒரு அற்புதமான த்ரில்லராக இருக்கும் என்பதை வலுவாக வெளிப்படுத்துகிறது.

ஒரு இரவில் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் குரலுடன் டீஸர் தொடங்குகிறது. அதன்பிறகு அது அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் வெகு பரபரப்பான காட்சிகளைக் காட்சிப்படுத்துகிறது, பரபரப்பான ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு ரசிகர்கள் தயாராகலாம்.