Tamil Movie Ads News and Videos Portal

”மாஸ்டர்” – அந்த முத்தப் புகைப்படம் வெளியாகுமா..??

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படம் தொடர்பான தகவல்கள் தான் தினமும் வெளியான வண்ணம் இருக்கிறது. இதில் சமீபத்திய எதிர்பார்ப்பு, அங்கு ஒரு எதிர்பாராத முத்தம் இருவருக்கு இடையில் பரிமாறப்பட்டு இருக்கிறது. அந்தப் புகைப்படங்கள் வெளியாகுமா என்பது தான் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து படத்தின் கலை இயக்குநர் சதீஷ்குமார் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். அப்பொழுது விஜய் சேதுபதி அவருக்கு ஒரு அன்பு முத்தத்தை பரிசாக அளித்திருக்கிறார். இதைப் பார்த்த தளபதி விஜய் தனக்கும் ஒரு முத்தம் கேட்க, அவரும் மகிழ்ச்சியுடன் முத்தமிட்டு இருக்கிறார். இதைப் பலரும் புகைப்படமாக எடுத்துள்ளனர். ஆனால் அந்தப் புகைப்படத்தை தாங்கள் சொல்லும் வரை வெளியிடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாம். சமயம் பார்த்து அப்புகைப்படத்தை படக்குழுவே வெளியிடப் போகிறார்களாம்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.