லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதன் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் மிகவும் துரிதகதியில் நடந்து வருகின்றன. படத்தினை ஏப்ரல் முதல் வாரத்திலும், இசை வெளியீட்டை மார்ச் 15திலும் நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.
ஏற்கனவே ஐ.டி ரெய்டு என அரசியல் விளையாட்டை எதிர்தரப்பு தொடங்கியிருப்பதால் இசை வெளியீட்டில் எந்தப் பிரச்சனையும் வராமல் இருப்பதற்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் பூட்டப்பட்ட அறைக்குள் வைத்து படக்குழுனர் மட்டும் பங்கு பெறும் வகையில் இசை வெளியீடு நடக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. பின்னர் இசை வெளியீடு நிகழ்ச்சியை டிவியில் வெளியிட ஏற்பாடு செய்வார்களாம். படக்குழு இப்படி திட்டமிட்டுக் கொண்டிருக்க. பூட்டிய அறைக்குள் இசை வெளியீடு நடந்தாலும், அதிலும் விஜய் ஏதாவது பேசி மாட்டிக் கொள்வாரா..? என்று காத்திருக்கிறதாம் ஒரு குரூப்.