சில குற்றங்களும், அதன் பின்னணியில் உள்ள விசாரணைகளும், விவரிப்புகளும் தான் மாருதிநகர் போலீஸ்ஸ்டேசன்
சென்னையின் ஒரு ஏரியாவில் இரவில் துவங்குகிறது கதை. வரலெட்சுமியின் காதலரான மகத் ஒரு க்ரைம் நடப்பதை நேரில் பார்க்கிறார். பார்த்ததை போலீஸிடம் பகிர்கிறார். போலீஸும் மகத்தும் சம்பவ இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு மகத்திற்கு ஒரு ஆபத்து நிகழ்கிறது. அது என்ன ஆபத்து? அந்த க்ரைம் என்ன? அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? வரலெட்சுமி மகத்திற்கு நேர்ந்த ஆபத்திற்கு எப்படி ரியாக்ட் செய்தார்? சந்தோஷ் பிரதாப், ஆரவ் உள்ளிட்டவர்களின் மூவ்மெண்ட் என்ன? என பல கேள்விகளுக்கு மினிமம் கியாரண்டி இண்ட்ரஸ்டிங்கோடு படத்தில் பதில் சொல்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்
வரலெட்சுமி சரத்குமார் போலீஸ் கேரக்டருக்கு பக்கா பொருத்தம். அவர் வசனம் பேசும் காட்சிகளை விட வசனம் இல்லாத காட்சிகளில் அதகளம் செய்கிறார். கலகத்தலைவன் படம் மூலமாக மிரட்டிய நடிகர் ஆரவ் இந்தப்படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக மாஸ் காட்டியிருக்கிறார். அவரின் ஆட்டிட்யூட் வேறலெவல் ரகம். சந்தோஷ் பிரதாப் வழமை போல சிறப்பு. சுப்பிரமணிய சிவா கொடுத்த கேரக்டரை சரியாக உள்வாங்கி நடித்துள்ளார்
இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு இசையும் ஒரு கதை சொல்லி என்பதை உள்வாங்கி இசை அமைத்துள்ளார் இசைஞர். ஒளிப்பதிவில் அட்டகாசம் செய்திருக்கிறார் கேமராமேன். முக்கியமாக சென்னையின் நைட் எஃபெக்ட் சீன்களில் பட்ஜெட் படம் என்ற சுவடே தெரியாத வகையில் மேக்கிங்கில் பின்னியிருக்கிறார். ஷார்ப்பான எடிட்டிங்கும் படத்திற்கு பலம்
ஆஹா ஓடிடி வெளியிட்டுள்ள இப்படத்திற்கு ஆன்மாவே திரைக்கதை தான். ஒவ்வொரு முடிச்சுகளும், அம்முடிச்சுகளை அவிழ்க்கும் விதமும் அழகாக கோர்க்கப்பட்டுள்ளது. நாம் யூகிக்கக்கூடிய முடிவுகளும் தெளிவுகளும் கதையில் இருந்தாலும் அதை சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது திரைக்கதை. ஒவ்வொரு சஸ்பென்ஸுக்கும் வேறு வேறு கேரக்டர்கள் வேறு வேறு பின்கதை சொல்வது செம்ம. சில மிகையான வசனங்கள், காட்சிகள், எமோஷ்னல்ஸ் ஆகியவை சிறு குறையாக இருந்தாலும், படத்தின் முடிவில் நம்மை ஏமாற்றாத படமாக மனதில் வந்தமர்கிறது மாருதி நகர் போலீஸ்ஸ்டேசன்.
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்
(குறிப்பு: மிகக்குறைந்த நாட்களில் படப்பிடிப்பை முடிப்பதற்கு அதிகமான நாட்கள் ப்ரீ புரொடக்ஷன் வேலை செய்ய வேண்டும். அதைக் கச்சிதமாகச் செய்துள்ளார் இயக்குநர். இப்படியான இயக்குநர்களே தயாரிப்பாளர்களை காப்பாற்றும் வல்லமை கொண்டவர்கள். வாழ்க)
# மாருதிநகர்போலீஸ்ஸ்டேஷன் ##MaruthiNagarPoliceStation