Tamil Movie Ads News and Videos Portal

மார்க் ஆண்டனி- விமர்சனம்

நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்துக்குச் செல்லும் டைம்ட்ராவல் போன் ஒன்று. அந்தப் போன் மூலமாக சிலதை மாற்றி அமைத்து அதன் விளைவால் நடக்கும் இரு டான்களின் மோதல் தான் மொத்தப்படமும்

டைம் ட்ராவல் படம், டைம்லூப் படம் என நிகழ்காலம் டூ எதிர்காலம், கடந்தகாலம் செல்லும் படங்கள் நிறைய பார்த்தாயிற்று. என்றாலும் ஒரு போன் மூலமாக கடந்தகாலத்திற்கு பேசினால் என்ன நடக்கும் என்பதை ஆக்‌ஷன் மசாலாவாக படமாக்கியுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

படத்தில் ஹீரோ விஷால் நடிப்பு படத்திற்கு வில்லனாகவும், வில்லன் எஸ்.ஜே சூர்யா நடிப்பு படத்திற்கு ஹீரோவாகவும் அமைஞ்சுருக்கு. ஹீரோவாக விஷால் ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் தெறிக்க விடுகிறார். எஸ்.ஜே சூர்யா ஒரு போன் கான்வர்சேஷன் காட்சியிலே மொத்த தியேட்டரையும் குத்தகைக்கு எடுத்துவிடுகிறார். ஹீரோயின் ரிதுவர்மாவிற்கு கிங்ஸ்ட்லி, சுனில் ஆகியோருக்கு என்ன வேலையோ …(சின்னவேலை) அவ்ளோதான் அவருக்கும். மனதில் ஆழமாக பதியும் படி எஸ்.ஜே சூர்யா தவிர வேறு யார் கேரக்டரும் எழுதப்படவில்லை

ஜிவி பிரகாஷ் ஏன் இவ்வளவு இரைச்சலான இசையை கொடுத்துள்ளார் என்று படம் முடியும் வரை தோன்றிக்கொண்டே இருந்தது. ஆண்டனி பாடல், ஐலவ் யூடி பாடல் மட்டும் ok ரகம். படத்தின் பெரும் பகுதி செட்டுக்குள்ளே செட்டிலாகி விட்டதால் ஒளிப்பதிவாளர் தன்னால் முடிந்த வித்தையைக் காட்டியுள்ளார்.

நடந்து போன ஒரு விசயத்தை…அந்த விசயம் நடக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனை எப்போதுமே சுவாரஸ்யமானது. அதை திரைமொழியாக்கும் போது, ரசிகனுக்கு, “நமக்கும் இப்படியொரு ஆப்ஷன் கிடைச்சா எப்படி இருக்கும்?” என்ற எண்ணம் தோன்றும்..தோன்றணும். But sadly படம் அப்படியான எமோஷ்னல் கனெக்ட்விட்டியைத் தரவே இல்லை. படத்தின் மெயின் கதாப்பாத்திரத்தோட மையப்பிரச்சனைக்குள் சென்று படம் டேக் ஆப் ஆகுறதுக்குள் நாம் டயர்ட் ஆயிடுறோம். கிலோ கணக்கான லாஜிக் மீறல்களும் பெரும் உறுத்தல். வசனங்களில் அநியாயத்திற்கு பழையகால பூமர் நெடி! குறிப்பாக “நடுவின் பால்” இனத்தை இயக்குநர் கொச்சைப்படுத்தியுள்ளது அவமானகரமானது. எஸ்.ஜே சூர்யா போன்ற ஒரு நல்ல கலைஞன் பெண் தன்மையுள்ள ஒரு கேரக்டரைப் பார்த்து, “அவனா நீ” என்பதெல்லாம் அருவருக்கத்தக்கது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இதுபோன்ற விசயங்களில் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். இன்று அரசும் சமூகமும் பெண் தன்மையுள்ளவர்கள் மேலுள்ள தங்களின் பார்வையை ஆரோக்கியமானதாக மாற்றி வருகிறது. ஆதிக் போன்றவர்கள் இப்படியான அரைவேக்காட்டுத் தனமாக பதிவு செய்யக்கூடாது.

second half ஓரளவு ஆடியன்ஸை பாசிட்டிவ் வைப்லே வைத்துள்ளது. மேலும் பர்ஸ்ட் half பார்த்துவிட்டு நாமும் படம் பற்றி ஒருமாதி மைண்ட் செட்டுக்கு வந்துவிடுகிறோம். அந்த விதத்தில் Second half பர்ஸ்ட் half-ஐ முந்திவிடுகிறது. So இந்த மேட்டரை வைத்தே மார்க் ஆண்டனி பாஸ்மார்க் வாங்கிடுறார்

One time watchable movie
3/5
-மு.ஜெகன் கவிராஜ்