Tamil Movie Ads News and Videos Portal

சில்க்ஸ்மிதா வீடியோவுடன் மன்சூர் அலிகானின் கொரோனோ குசும்பு

- Advertisement -

வில்லனாக ,காமெடியனாக, சமூகப்போராளியாக சகட்டுமேனிக்கு கலக்கி வரும் நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக ஒரு வித்தியாசமான வீல்டியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மறைந்த சிலுக்கு ஸ்மிதாவுடன் அவர் மிக நெருக்கமாக லூட்டி அடிக்கும் அப்பாடல் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரானோவிலிருந்து தற்காத்துக்கொள்ள வீட்டிலேயே இருங்கள்.அங்கும் ஒரு மீட்டர் இடைவெளியை மெயிண்டெய்ன் பண்ணுங்கள் என்று அரசு விளம்பரங்கள் மிரட்டினாலும் உண்மை நிலமை வேறு மாதிரியாக இருப்பதாக சில அபாய தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப நாட்களில் மெடிக்கல் ஷாப்களில் காண்டம் விற்பனை மிகவும் சூடு பிடித்துள்ளது. WORK FROM HOME என்பதை வழக்கம்போல் நம் மக்கள் தவறுதலாக புரிந்துகொண்டு விட்டதாகவே தெரிகிறது.

அந்த பேராபத்திலிருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்த மன்சூர் அலிகான் தான் நடித்த ‘தெய்வக் குழந்தை’படப்பாடல் ஒன்றில் சிலுக்கு ஸ்மிதாவுடன் கும்மாளம் போட்ட பாடல் ஒன்றை வெளியிட்டு ‘21 நாள் வீட்டுல தனியாத்தான் இருக்கச் சொல்லியிருக்காங்க. இப்படியெல்லாம் கூத்தடிக்கக்கூடாது’என்று குசும்புடன் விழிப்புணர்வை ஏற்படுத்த பார்த்திருக்கிறார்.

அந்த வீடியோ இணைப்பு..

- Advertisement -