காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. இவர் தமிழில் வெளியான ”இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்து தன் அபாரமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார். இவர் தற்போது மலையாளத் திரைப்படத்திலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். மலையாளத்தில் வரும் டிசம்பர் 25ம் தேதி அன்று “மை சாண்டா” என்ற திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் மானஸ்வி திலீப்பின் மகளாக நடித்திருக்கிறார். கிறிஸ்துமஸ் தினத்தின் முன் இரவில் சாண்டாக்ளாஸ் வேடம் இட்டு செல்லும் தந்தை மகள் இருவரைப் பற்றியக் கதை இந்த “மை சாண்டா”. இப்படத்தில் நடித்திருப்பதோடு மட்டுமின்றி மலையாள வசனத்தை ஏற்ற இறக்கத்தோடும் பேசி அசத்தியிருக்கிறாராம் மானஸ்வி.