2018ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படமான “பேட்ட” திரைப்படம் யாருக்கு திருப்புமுனையாக அமைந்ததோ இல்லையோ, சசிக்குமார் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு அது மிகப்பெரிய திருப்புமுனைப் படமாக அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் அப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரை ஒப்பிடும் போது, மாளவிகா மோகனன் நடித்தது மிகச் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் அக்கதாபாத்திரத்தைக் கொண்டே தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் சூர்யா வெற்றிமாறன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் மாளவிகா மோகனன் தான் நாயகி என்று கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளத்தில் அறிமுகமான மாளவிகாவிற்கு தற்போது தான் அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டியிருக்கிறாள் போலிருக்கிறது. அடைமழையில் நனைகிறார் மாளவிகா.