‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனுஷை நாயகனாக வைத்து தனது அடுத்தப் படத்தை தொடங்கியிருக்கிறார். இதில் மலையாள நடிகர் லால், மற்றும் பிரபல ஒளிப்பதிவாளரும் சதுரங்க வேட்டை படத்தின் நாயகனுமான நட்டி என்னும் நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். படத்திற்கு இன்னும் தலைப்பு சூட்டப்படாத
நிலையில் தனுஷின் ஜோடியாக நடிக்கப் போவது யார்..? என்கின்ற கேள்வி இருந்து வந்தது. தற்போது மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷின் ஜோடியாக முதன் முதலில் தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து நாயகியாக உயர்ந்த இவர், முதன் முறையாக மலையாளப்படத்தில் நடித்த “அனுராக கார்க்கின் வெல்லம்” என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.