பொன்னியின் செல்வனில் இணைந்த மலையாள நடிகர் “லால்”
இயக்குநர் மணிரத்னத்தின் படங்கள் என்றாலே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருக்கும். மற்ற படங்களில் இருந்த நட்சத்திரப் பட்டாளம் எல்லாம் சும்மா என்று சொல்லும் அளவிற்கு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நாளுக்கு நாள் இணைந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், ரகுமான், பார்த்திபன், த்ரிஷா, ஜெயராம், சத்தியராஜ் என்று கூட்டமே படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்த மலையாள் நடிகர் லால் மற்றொரு நட்சத்திரமாக இப்படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில் “மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பதற்காக குதிரையேற்றம் பயிற்சி செய்து வந்தேன். பயிற்சி முடிவடைந்துவிட்டது. வரும் டிசம்பரில் தாய்லாந்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.