லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இப்படத்தின் வெளீயீடு இந்த தேதிகளில் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பின் ஊரடங்கால் இப்படம் எப்பொழுது வெளியாகும் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர், இந்த விடுமுறை காலத்தில் மாஸ்டர் படக்குழு உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருப்பார்கள் என்று ஒரு ஒவியத்தினை வெளியிட்டார்.
அதில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் போன்றோர் லேப்டாப்பில் வேலை செய்வது, மொபைலில் ஏதோ தேடுவது, கதை எழுதுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு இருக்க, நாயகி மாளவிகாவோ சமைத்துக் கொண்டு இருக்கிறார். இதைப் பார்த்து கடுப்பான மாளவிகா பெண்கள் என்றால் அவர்களுக்கு சமைப்பதைத் தவிர வேறு பணிகள் ஏதும் இருக்காதா..? என்று கோபப்படவே அந்த ரசிகர் அப்புகைப்படத்தை சற்று மாற்றி இரண்டாம் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் மாளவிகா படித்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து சந்தோஷம் அடைந்த மாளவிகா, “எனக்கு படிப்பது மிகவும் பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.