Tamil Movie Ads News and Videos Portal

‘மகான்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். ‘சீயான்’ விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மும்பை, இந்தியா- பிப்ரவரி-3, 2022 – ‘மகான்’ -தமிழ் ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லரை Prime Video இன்று வெளியிட்டது, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையிடப்படவுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லரில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகிய பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேர்மையான, கொள்கை பிடிப்பு கொண்ட வாழ்க்கையிலிருந்து விலகியதால், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட ஓர் எளிய மனிதனின் கதையில் இந்த டிரெய்லர் நம்மை அழைத்துச் செல்கிறது. அவர் தனது லட்சியங்களை எட்ட தனித்து முன்னேறுகிறார். அதில் அவர் வெற்றியின் உச்சத்தை அடைந்தாலும், அவர் தனது மகன் தன்னுடன் இல்லாத இழப்பை உணர்ந்து, அவரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள், மாற்றங்கள், ஏற்ற தாழ்வுகளை இப்படம் சித்தரிக்கிறது.

“திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் முழு முயற்சியுடன் ஒத்துழைத்து, ஆதரவு தந்ததின் விளைவாக உருவான ‘மகான் =’ முழுமையான அன்பின் வெளிப்பாடு” என்று படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறினார். “விக்ரமுடன் பணிபுரிவது மகிழ்ச்சியான ஒன்று, மேலும் ‘மகான்’ திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையில் 60-வது படம் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. ‘சீயான்’ விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் என தந்தையையும், மகனையும் ஒன்றாக இப்படத்தில், முதன் முதலாக இயக்கும் வாய்ப்பையும் இந்தத் திரைப்படம் எனக்கு அளித்துள்ளது. இருவரும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிக்கொணரந்துள்ள இப்படம், ரசிகர்களும், பார்வையாளர்களும் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். Amazon Prime Video மூலம் உலகெங்கும் திரையிடப்படும் ‘மகான்’ பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ‘சீயான்’ விக்ரம் கூறுகையில், “மகான் திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆக்‌ஷன் மற்றும் டிராமாவின் சரியான கலவையைக் கொண்டிருக்கும். இந்தத் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பல சாயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு சாயலும் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. என்னுடைய 60வது படமாக எனது சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதால், இது எனக்கு மிக முக்கியமான படமாகும், இரண்டாவதாக எனது மகன் துருவ் விக்ரம் இபடத்தில் எனது மகனாக நடிக்கிறார். இந்தப் பாத்திரத்திற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார், அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாகச் சித்தரிக்க முழுமையான உழைப்பை அளிக்கும் கார்த்திக் சுப்பராஜ் போன்ற திறமையான இயக்குநருடன் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகிறது. பிப்ரவரி 10 அன்று ‘மகான்/ Prime Video மூலம் உலகெங்கும் சென்றடைய உள்ளார். அதுவே எனது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.” என்கிறார்.

“மகான் எனக்கு முக்கியமான திரைப்படம் என்பேன். ஏனென்றால் நான் என் தந்தையுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை, அதுவும் அவரது மகனாகவே இதில் நடித்துள்ளேன். அவர் மிகவும் திறமையான மனிதர், மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய சிறந்த புரிதலைக் கொண்டவர், அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, ”என்று துருவ் விக்ரம் கூறினார். அவர் மேலும் கூறுகையில் “கார்த்திக் சுப்புராஜ் சாரின் இயக்கத்தில் பணிபுரிவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, என் கதாபாத்திரத்தின் நுணுக்கங்களையும் தீவிரத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவினார். எனது நடிப்பையும் படத்தையும் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். Prime Video, மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ‘மகான், திரைப்படத்தைக் காணமுடியும் என்பது மேலும் சிறப்பான ஒன்று.” என்கிறார்.

“விக்ரம் மற்றும் கார்த்திக்குடன் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம் ஆகும். ‘மகான்’ ஒரு ஆக்‌ஷன் நிறைந்த பொழுதுபோக்குப் படமாகும், கதை முழுவதும் பலவிதமான டிராமா மற்றும் உணர்ச்சிகள் பின்னிப்பிணைந்துள்ளது. திரைப்படத்தில் எனது கதாபாத்திரமான நாச்சி, தனது சிறிய மற்றும் அன்பான குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை நடத்தும் ஓர் எளிமையான மற்றும் இரக்க குணமுள்ள பெண், அவரது கணவர் கொள்கைபிடிப்பான வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் செல்லும்போது அவரது உலகம் எவ்வாறு சிதைகிறது என்பதையே இப்படம் சித்தரிக்கிறது. உலகெங்கிலும் உள்ள Prime Video பார்வையாளர்கள் படத்தை அதன் அற்புதமான கதைக்களத்திற்காகப் பெருமளவில் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று மகான் படத்தின் முன்னணி நடிகை சிம்ரன் பகிர்ந்து கொண்டார்.

“நாம் செய்யும் பணி எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் பரவுவதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, மேலும் மகான் திரைப்படம் Prime Video-இல் உலகளாவிய பிரீமியர் மற்றும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மகான் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், அற்புதமான கதைக்களம் மற்றும் அதை இயக்குநர் விளக்கியுள்ள விதம் பார்வையாளர்களைக் கவரும் என்று நான் நம்புகிறேன்.” ” என்று நடிகர் பாபி சிம்ஹா பகிர்ந்துள்ளார்.

கதை சுருக்கம்: மகான் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய கதை. மனைவி மற்றும் ஒரு மகனுடன் ஒரு சிறிய குடும்பத்தில் மிகவும் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, ஒருபோதும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழும் சாதாரண நபரின் கதை. அவரது ஒரு நாள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்துடன் ஒத்திசைப்பது போல இயல்பான வாழ்க்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையின் எல்லையை மீறி அடியெடுத்து வைக்கும் போது, அமைதியான வாழ்க்கை எதிர் திசையில் மாறி, அதன் விளைவாக அவரது குடும்பம் அவரை விட்டு வெளியேறுகிறது. சிறு வயதில் தொலைந்து போன ஒரு நண்பருடன் கைகோர்த்து கோடீஸ்வரராகி ராஜ வாழ்க்கையை வாழத் துவங்குகிறார். இருப்பினும், ஒவ்வொரு நாளும் தனது மகன், தன்னுடன் இல்லாததை நினைத்து வருந்துகிறார். ஒரு நாள் அவரது மகன் ஒரு அசாதாரண சூழ்நிலையில் அவரது வாழ்க்கையில் திரும்பி வரும்போது அவருக்கு வாழ்க்கை முழுமை பெற்றது போலத் தோன்றுகிறது. அடுத்து என்ன நடக்கிறது? என்பதே இந்த பரபரப்பான, அதிரடியான ரோலர் கோஸ்டர் சவாரியின் முக்கியக் கட்டம்.

Prime Video கேட்லாகில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் மகான் திரைப்படமும் இணைகிறது. இதில் மும்பை டைரீஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான்- செம காமடி பா,ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ் பண்டிட்ஸ், தாண்டவ், பாதாள் லோக், மிர்சாபூர் சீசன்1 மற்றும் 2, தி ஃபர்காட்டன்- ஆசாதி கே லியே, சன்ஸ் ஆப் சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 1 மற்றும் 2, இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகிய Amazon Original தொடர்களும் இந்தியத் திரைப்படங்களான கூலி நம்பர்1, குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, ஜெய் பீம், பொன்மகள் வந்தாள், பிரெஞ்சு பிரியாணி, லா, சுபியும் சுஜாதாயும், பென்குயின், வி சியூ சூன், நிசப்தம், சூரரைப் போற்று, பீமசேனா நளமஹாராஜா, திருஷ்யம்-2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளஸ்மெலடிஸ், புத்தம் புதுக் காலை, அன்பாஸ்டு ஆகியனவும், போராட் சப்சிகியுவன்ட் மூவி பிலிம், தி வீல் ஆப் டைம், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளும் அடங்கும்.

இவை அனைத்தும் Amazon Prime உறுப்பினர்களுக்குக் கூடுதல் கட்டணமின்றிக் கிடைக்கும். இந்தச் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ செயலியின் மூலம் Prime உறுப்பினர்கள் மகான் திரைப்படத்தை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் காணலாம். Prime Video செயலியில், எபிசோடுகளைப் பதிவிறக்கம் செய்து மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் எவ்விதக் கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் காணும் தேர்வும் Prime உறுப்பினர்களுக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ₹1499 அல்லது மாதத்திற்கு ₹179 என்ற கட்டணத்தில் Prime உறுப்பினராக இணைவோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி Prime Video இலவசமாகக் கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime -இல் மேலும் தகவல் பெறலாம் மற்றும் 30 நாட்கள் இலவச சோதனைக்குப் பதிவு செய்யலாம்.