Tamil Movie Ads News and Videos Portal

தமிழில் வெயிட்டாக களம் இறங்க இருக்கும் மகேஷ்பாபு


நடிகர் விஜய்க்கு பல வெற்றிப்படங்களை சப்ளை செய்தவர் தெலுங்கில் மாஸ் ஹீரோவாக இருக்கும் மகேஷ்பாபு. அவர் நடித்த ஒக்கடு படம் தான் தமிழில் கில்லியானது. தமிழில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற போக்கிரிப் படமும் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் ஹிட்டான படம் தான். ஆனால் அவர் நேரடியாக ஒரு தமிழ்படத்தில் நடித்தார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் தான் அது.

அப்படம் ஆடியன்ஸால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்பைடர் படத்தோல்வியால் மகேஷ்பாபு ஏகத்துக்கும் அப்செட் எனத் தகவல்கள் வந்தன. அதனால் தமிழில் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்பது அவர் எண்ணம். அதற்கான வாய்ப்பு தற்போது கணிந்திருப்பதாகவே தெரிகிறது. அதாவது ராஜமெளலி ஆர் ஆர் ஆர் படத்திற்குப் பின் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்குவார் என்ற தகவல் வந்துள்ளது. எப்படியும் ராஜமெளலி படம் எடுத்தால் பைலிங்குவல் படமாகத் தான் இருக்கும். அதனால் மகேஷ்பாபுவின் தமிழ் ரீ என்ட்ரி அதகளமாக இருக்கும் என்று நம்பலாம்!