காதல் கதைகளுக்கென்று எப்போதும் ஒரு தனி கிரேஷ் இருக்கும். அந்த வரிசையில் வித்யாசப்பட்ட காதல் கதைகள் கொண்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. “மகாவீரன்” தனிப்பட்ட காதல் கதையை கொண்ட படம். காதலர்கள் மத்தியில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதத்தையும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் சுட்டிக்காட்டி கதைக்களம் பின்னப்பட்டுள்ளது.
இந்த படத்தை பார்க்கும் காதலர்கள் காதலருடனும், காதலியுடனும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பாடமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹரிச்சந்திரன்.நாகவர்மாபைராஜீ, திவ்யாசுரேஷ் காதல் நடித்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட “மகாவீரன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.