என்னை அறிந்தால், செக்கச் செவந்த வானம், தடம் என சீறிப்பாய்ந்து வரும் அருண் விஜய்க்கு மாஃபியா படத்தில் பில்லா அஜித் போல் ட்ரைப் பண்ணிப் பார்க்க ஆசை போல. செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் நடித்திருக்கிறார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக வலம் வரும் அவருக்கு, போதப்பொருள் மாஃபியா பிரசன்னாவை வேட்டையாட வேண்டும் என்பது டார்கெட். அதை எப்படி அச்சிவ் பண்ணார் என்பது தான் கதை.
படத்தில் யாரோட நடிப்பையும் குறையே சொல்ல முடியாது. படத்தின் மேக்கிங்கும் மிகச்சிறப்பாக இருக்கிறது. லைட்டிங் செட்டப்கள் செட் டிப்பார்ட்மெண்ட் வொர்க் என படத்தை டெக்னிக்கலாக அசத்தி இருக்கிறார்கள். பிரசன்னாவின் மெச்சூட் வில்லனத்தனம் ரசனையாக இருக்கிறது. இளைஞர்களின் கனவு நாயகியான பிரியாபவானி சங்கர் கன் ஷாட்டில் வெளுத்திருக்கிறார். பன்ச்-களில் தெறித்து விழும் எடிட்டிங் வேலையும் செம்ம எனர்ஜி.
எல்லாம் ஓ.கே. ஆனால் படத்தை நம்மோடு கனெக்ட் செய்யும் கதை தான் படு வீக்காக இருக்கிறது. எந்தக் கேரக்டரும் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தேமே என கடந்து போகிறார்கள். ஹீரோ குடும்பத்தை வில்லன் கடத்தி வைத்திருக்கும் வேளையில் நமக்குத் துளி பீலிங்ஸும் வராதது பெருந்துயரம்.
டெக்னிக்கல் மற்றும் மேக்கிங்கில் காட்டிய அதீத அக்கறையை கதை சொல்லலிலும் காட்டி இருந்தால் மாஃபியா மகா மாயம் செய்திருக்கும்!
-மு.ஜெகன்சேட்