நடிகர் ஓய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி இப்போது சமூக ஊடகங்களில் நவீன பவர்ஸ்டாரினியாக பவனி வருகிறார். கொரோனா நம்மை கோரப்பிடி பிடித்து ஆட்டிக்கொண்டிருக்க, இவர் அவ்வப்போது ஒரு வீடியோ போட்டு மக்களை கொலகாண்டாக்கி வருகிறார். பிரமதர் மோடி சென்றவாரம் மக்கள் எல்லாம் ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள் என்றார். அதற்கான காரணத்தைப் பற்றி மோடி எதுவும் சொல்லவில்லை.
அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு பலரும் பல ஷாக் அடிக்கும் காரணங்களைச் சொன்னார்கள். அவற்றில் மதுவந்தி சொன்ன காரணம் தான் அல்டிமேட். அதாவது 9 கிரகங்களும் ஒன்றாய் சந்திக்கும் அந்த நேரத்தில் விளக்கேற்றுவது விசேஷம் என்றார். தலையில் அடித்துக்கொண்டான் தமிழன். தற்போது நாட்டில் 8000 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு செலவிட 5000 கோடி அக்கவுண்டில் போட்டு வச்சாச்சு என்ற ஒரு அதகள வீடியோவைத் தட்டியுள்ளார். இணையத்தில் இணையற்ற வரவேற்பைப் பெற்று வருகிறது அவ்வீடியோ