Tamil Movie Ads News and Videos Portal

மாயோனையும் பக்ரீத்தையும் இணைக்கும் நிலா !

ஒருவரையும் வெறுக்காமல் அனைவரையும் நேசிப்போம், எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக “மாயோன்” திரைப்படக்குழு “பக்ரீத்” பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது. புத்தம் புதிய களத்தில் மாறுபட்ட திரைக்கதையில், கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக அனைவரையும் கவர்ந்த, இத்திரைப்படம் 3 வாரங்களை கடந்த பிறகும், மக்களின் அளவு கடந்த வரவேற்பை தொடர்ந்து, திரையரங்குகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

“மாயோன் படத்திற்கும் பக்ரீத் பண்டிகைக்கு ஒரு அழகான தொடர்பு உண்டு அது தான் நிலா” என்று தயாரிப்பு நிறுவன டிவிட்டர் பக்கத்தில் பகிரபட்டிருக்கிறது. தேசமெங்கும் அன்பை பரப்புவோம் என்பதை முழக்கமாக முன்னெடுக்கும் விதமாக பக்ரீத் பண்டிகையை அனைவரும் அன்போடு கொண்டாடுவோம் என வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது மாயோன் படக்குழு. மாயோன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பெரும் பொருட்ச் செலவில், நமது பாரம்பரிய பெருமைகளை பறை சாற்றும் விதமாக பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பெரிய தொழில் நுட்ப கலைஞர்களுடன் ஒரு அதிரடி திரில்லராக மாயோன் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளது குறிப்பிடதக்கது.